நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது, கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது, கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா, நந்தா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், டைரக்டர் வசந்த் உள்ளிட்டோர் நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு பாராட்டு தெரிவித்து நினைவு சின்னம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். பின்னர் நடிகர் சங்க கட்டிட நிதியாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து நடிகர் சங்க கட்டிட நிதியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை நாசரிடம் வழங்கினார்கள்