டுவிட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம்..!

நடிகர் விக்ரம் தற்போது டுவிட்டரில் கணக்கு தொடங்கியுள்ளார். சென்னை, நடிகர் விக்ரம் கடந்த 2016-ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். டுவிட்டரில் புதிய கணக்கைத் தொடங்கியுள்ள அவர், வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய டுவிட்டர் நுழைவை அறிவித்துள்ளார். அந்த வீடியோவில், தன்னுடைய அடுத்த படமான ‘சியான் 61’ படம் குறித்து கூறிய விக்ரம், பல ஆண்டுகளுக்குப் பிறகு டுவிட்டரில் கணக்கு தொடங்க காரணம் என்ன என்றும் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவருக்கும் தன்னுடைய அன்பை பகிர்ந்துள்ளார்.