ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு..!

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படத்தில் நடிகர் ஜெயம், ரவி ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படமொன்றில் நடிக்கிறார். ‘ஜெ.ஆர் 30’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நட்ராஜ், வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ஜெ.ஆர் 30’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. Also Read – ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்..! இந்த நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் 31-வது படம் குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 29 -ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.