சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வை அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவு! ஐசிசி பதிவிட்ட வீடியோ

எம் எஸ் தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. சென்னை, எம் எஸ் தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவு பெறுகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் (19:29) தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டியில், தோனி கப்தில் வீசிய பந்தால் ரன் அவுட் ஆகி கண் கலங்கி மைதானத்தை விட்டு வெளியேறியதிலிருந்தே அவர் அதன்பின் பல போட்டிகளில் பங்குபெறவில்லை. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், தோனி 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 7.30 மணியளவில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். தோனி இந்திய அணியிலிருந்து விலகி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டாலும் இன்றும் அவரை கேப்டனாக எண்ணும் வீரர்கள் உள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீடியோ பதிவிட்டு சிறப்பித்துள்ளது.