கிரிப்டோ கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா 4வது வெற்றி

3-1 என்ற கணக்கில் லெவன் அரோனியனை தோற்கடித்து, பிரக்ஞானந்தா 4வது வெற்றியைப் பதிவு செய்தார். அமெரிக்கா, அமெரிக்காவின் மியாமி நகரில் எப்.டி.எக்ஸ்கிரிப்டோ கோப்பை ரேபிட் செஸ் போட்டிகள் நடந்து வருகிறது . இதில் நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா ,உலகின் 6 ஆம் நிலை வீரரான அமெரிக்க வீரர் லெவன் அரோனியனை எதிர்கொண்டார்.இந்த போட்டியில் 3-1 என்ற கணக்கில் லெவன் அரோனியனை தோற்கடித்து, பிரக்ஞானந்தா 4வது வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் ,நார்வே வீரர் மாக்ன்ஸ் கார்ல்சன்னுடன் பட்டியலில் நீடிக்கிறார் பிரக்ஞானந்தா.