காமன்வெல்த் மல்யுத்த போட்டி : பஜ்ரங் புனியா, தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் தொடங்கியுள்ளன. பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது. 8-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா 4-0 என்ற கணக்கில் லோவ் பிங்காம்-யை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதே போல ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோஎடை பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா நியூசிலாந்தின் மேத்யூ ஆக்சன்ஹாமை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.