காமன்வெல்த் போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர் காலிறுதிக்கு முன்னேற்றம்

குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சாகர் 5-0 என்ற கணக்கில் கேமரூனின் மேக்சிம் யெக்னாங் என்ஜியோவை வீத்தினார். பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் ஆடவருக்கான (92 கிலோ எடை) குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. அதில் இந்திய வீரர் சாகர் கேமரூனின் மேக்சிம் யெக்னாங் என்ஜியோவை எதிர் கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாகர் 5-0 என்ற கணக்கில் மேக்சிம் யெக்னாங் என்ஜியோவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் காலிறுதிக்குள் நுழைந்தார்.