கவனம் ஈர்க்கும் ஆண்ட்ரியா படத்தின் புதிய பாடல்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் பிசாசு 2. இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் பிரியங்கா குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.