உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: சாய்னா நேவால் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சாய்னா நேவால் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். டோக்கியோ, 27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. அதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மேலும், பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அதேபோல கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் இஷான் பத்நாகர்-தனிஷா கிரஸ்டோ இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. மறுபுறம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.