உங்களையும் ஒரு நாள் உலகம் திரும்பி பார்க்கும் – மாணவர்களுக்கு விக்ரம் அறிவுரை

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’. இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருத்திருக்கிறார். இப்திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கோப்ரா படத்தை பிரபலப்படுத்துவதற்காக விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் திருச்சி, மதுரை உள்பட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்த வகையில் கல்லூரி மாணவர்களிடையே பேசிய விகரம், ‘கோப்ரா’ ஆகஸ்ட் 31ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கிறதோ. அந்த துறையில் முழுமையான மனதுடன் பணியாற்றினால், நீங்களும் சாதனையாளர் தான். உங்களையும் ஒரு நாள் உலகம் திரும்பி பார்க்கும் என்று கூறினார்.