உக்ரைன் அகதிகளை சந்தித்த பிரியங்கா சோப்ரா..!

பிரியங்கா சோப்ரா போலந்தில் அகதிகளாக தங்கி உள்ள உக்ரைன் அகதிகளை நேரில் சென்று சந்தித்தார். பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறிய இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கிறார். உலகில் மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். உக்ரைனில் ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் 20 லட்சம் உக்ரைன் குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியதாக ஏற்கனவே கவலை தெரிவித்து இருந்தார். ரஷியா, உக்ரைன் போரினால் இடம் பெயர்ந்துள்ள அகதிகளுக்கு உலக தலைவர்கள் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தார். உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் யுனிசெப் நன்கொடை இணைப்பையும் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா போலந்தில் அகதிகளாக தங்கி உள்ள உக்ரைன் அகதிகளை நேரில் சென்று சந்தித்தார். அகதி முகாமில் உள்ள குழந்தைகளோடு மகிழ்ச்சியோடு உரையாடினார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது.