இப்படி ஒரு செயலா? பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை பாராட்டும் ரசிகர்கள்

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுது. புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்றார். எப்போதும் போலவே அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது திடீரென ஒரு ரசிகர் எதிர்பார்க்காத வகையில் மேடை மீது பாய்ந்து நடிகர் ஹிருத்திக் ரோஷன் அருகே வந்து அவர் காலை தொட்டு கும்பிட்டார். உடனே ஹிருத்திக் ரோஷனும் அந்த ரசிகரின் காலை தொட்டு கும்பிட்டதோடு மட்டுமல்லாமல் அவரை கட்டி அணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் ஹிருத்திக் ரோஷனை பாராட்டி வருகின்றனர்.