இந்து தெய்வங்களை கேலி செய்ததாக குற்றச்சாட்டு; லால் சிங் சத்தா படத்தை திரையிட விடமாட்டோம் – இந்து அமைப்பினர் போராட்டம்!

அமீர் கானின் லால் சிங் சத்தாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. லக்னோ, அமீர் கானின் சமீபத்திய லால் சிங் சத்தாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், படம் தொடர்பான சர்ச்சைகளும் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. இப்படத்தில் அமீர்கான், இந்து தெய்வங்களை கேலி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். 1994இல் ஹாலிவுட்டில் வெளியாகி ஆஸ்கர் விருது பெற்ற “பாரஸ்ட் கம்ப்” ஆங்கிலப் படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீ-மேக் படமான “லால் சிங் சத்தா” படத்தில் அமீர் கான் மற்றும் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில், சனாதன் ரக்ஷக் சேனா என்ற இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்து அமைப்பினர் அவரது திரைப்படங்களை இந்தியா முழுவதும் தடை செய்யப்போவதாகவும் மிரட்டினர். “சனாதனவாதிகளான நாங்கள் அனைவரும் அவரது படங்களை நம் நாட்டில் ஓட விடமாட்டோம். நாங்கள் வீடு வீடாகச் சென்று அமீர்கானின் படங்களைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். அதே நேரத்தில் படத்தைத் தடை செய்யுமாறு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் கேட்டுக்கொள்கிறோம்” என இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் தொடர்பான சர்ச்சைகளை பற்றி அமீர் கான் உரையாற்றினார். அவர் கூறுகையில், “நான் யாரையும் எந்த வகையிலும் காயப்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன். யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. யாராவது படத்தைப் பார்க்க விரும்பவில்லை என்றால், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்” என்று கான் கூறினார்.