இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கு கொரோனா

ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் பங்கேற்க துபாய் செல்லும் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் செல்லமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது.