இணையதளத்தில் கசியும் வாரிசு பட காட்சிகள்.. குழப்பத்தில் படக்குழு

Actor Vijay Varisu Third Look HD Images

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்தனர். பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளி விட்டு சண்டைபோடும் காட்சிகள் வெளியானது. சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் நடந்த வாரிசு படப்பிடிப்பை செல்போனில் படம்பிடித்து சிலர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. படம் திரைக்கு வரும் முன்பே படக்காட்சிகள் ஒவ்வொன்றாக இணயதளத்தில் வெளியாகி வருவது படத்துக்கான எதிர்பார்ப்பை குறைத்து விடும் என்றும் எனவே படப்பிடிப்பில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் படக்குழுவினரை விஜய் ரசிகர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

Actor Vijay Varisu Third Look HD Images