ஆலியாபட் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். இவர் தற்போது நடித்துள்ள படம் “டார்லிங்ஸ்”. பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். அண்மையில் இவர் நடித்த ‘கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மிகவும் திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆலியாபட் தற்போது நடித்துள்ள படம் “டார்லிங்ஸ்”. இயக்குனர் ஜஸ்மீட் கே ரீன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷேபேலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் கணவரை ஆலியாபட் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆலியாபட்டிற்கு எதிராக ‘பாய்காட் ஆலியாபட்’, ‘பாய்காட் டார்லிங்ஸ்’ #boycottAliaBhatt #boycottDarlings போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் பலர் “டார்லிங்ஸ்” படத்தை தடை செய்ய வேண்டும். நடிகர் ஆம்பர் ஹெர்ட்டின் இந்திய வெர்ஷன் தான் ஆலியாபட் போன்ற கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.