ஆர்யா நடித்துள்ள ‘கேப்டன்’ படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘கேப்டன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சென்னை, ‘டெடி’ மற்றும் ‘சார்ப்பட்டா பரம்பரை’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன்’. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால், இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘கேப்டன்’ திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ‘கேப்டன்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஏலியனை எதிர்த்து சண்டையிடும் இராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘கேப்டன்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.