ஆசிய கைப்பந்து: இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

இறுதி ஆட்டத்தில் ஈரான் இந்திய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. சென்னை, 21-வது ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி பக்ரைனில் உள்ள ரிப்பா நகரில் நடந்தது. 17 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஈரானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஈரான் 25-12, 25-19, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இதனால் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. இந்திய அணியின் கேப்டன் துஷயந்த் சிங் ஜாக்கர் சிறந்த பிளாக்கர் விருதையும், வீரர் கார்த்திகேயன் சிறந்த லிபரோ விருதையும் தட்டிச் சென்றனர்.