அரசியலில் களமிறங்குவது குறித்து திரிஷா விளக்கம்

தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் திரிஷா. திரிஷா விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவலுக்கு அவர் விளக்களித்துள்ளார். தெலுங்கில் ‘வர்ஷம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது திரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு திரிஷா விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் திரிஷாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் திரிஷா அரசியலில் நுழைவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தான் அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவலில் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை. அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறி தன்னைப்பற்றிய அரசியல் வதந்திக்கு திரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.