அமெரிக்க ஓபன்: முதல் சுற்றில் டன்கா கோவினிச்சை எதிர் கொள்கிறார் செரீனா வில்லியம்ஸ்

ன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை எதிர்கொள்கிறார். நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிசில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஸ்டீபன் கோஸ்லோவை (அமெரிக்கா) சந்திக்கிறார். முன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை எதிர்கொள்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக் தனது சவாலை ஜாஸ்மின் பாவ்லினியுடன் (இத்தாலி) தொடங்குகிறார். இந்த போட்டியுடன் டென்னிசில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ள முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் டன்கா கோவினிச்சை (மான்ட்னெக்ரோ) சந்திக்கிறார்.