அஜித்குமாரின் 30 ஆண்டு திரையுலக பயணத்தை ஆழ்கடலில் கொண்டாடிய ரசிகர்கள்..!

அஜித்குமாரின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை வரவேற்கும் வகையில், 60 ஆடி ஆழத்தில் ரசிகர்கள் பேனர் வைத்தனர். புதுச்சேரி, நடிகர் அஜித்குமாரின் 30 ஆண்டுகால திரையுலக பயணத்தை ஒட்டி, புதுச்சேரி ஆழ்கடலில் பேனர் வைத்து ரசிகர்கள் கொண்டாடினர். அஜித்குமாரின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை வரவேற்கும் வகையில், ஆழ்கடல் பயிற்சியாளர்கள் உதவியுடன் 60 ஆடி ஆழத்தில் ரசிகர்கள் பேனர் வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.